.

Thursday, November 12, 2015

ஔரங்காபாத் மத்திய செயற்குழுவில்
வரவேற்புக்குழுத் தலைவரின் வரவேற்புரை

வரலாற்றுப் புகழ் மிக்க ஔரங்காபாத் நகருக்கு வரவேற்புக்குழுவின் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்சுமார் 400 வருடங்களுக்கு முன் மாலிக் அம்பரால் இந்த நகர் உருவாக்கப் பட்டது. தென்னிந்தியாவை வெல்ல வேண்டும், அச்சுறுத்தலாக விளங்கிய மாவீரன் சிவாஜியை வெல்ல வேண்டும் என விரும்பிய முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் இந்நகரில் வசிக்கத் துவங்கிய பிறகுதான் இந்த நகரம் முக்கியத்துவம் பெறலாயிற்று.
                எல்லோரா அஜந்தா குகைகள், தியோகிரி கோட்டை, மகாபரா, பஞ்சகீ மற்றும் ஔரங்கபாத் குகைகள் இந்த நகரை சர்வதேச சுற்றுலா புகழ் மிக்க நகரமாக்கியுள்ளன,
                சுதந்திரத்திற்குப் பின், குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, தொழில்துறைகளின் கேந்திரமான நகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இங்குள்ள குறு மற்றும் நடுத்தர ஆலைகள் சுமார் 5000 ல் மூன்று லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றுகின்றனர்.
                இந்த நகருக்கு தொழிலாளர் போராட்டங்களின் சிறப்பு மிக்க வரலாறு உள்ளது. மறைந்த சுதந்திரப்போராட்ட வீரர் கோவிந்பாய் ஷரோப், தோழர்கள் ஹபிபுத்தீன்,  D L  பதக் தலைமையில் 1938ம் ஆண்டு நிஜாம் ஆட்சிகாலத்திலேயே முதலாவது தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. ஔரங்காபாத் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளிகள், சபை மஸ்தூர் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இயக்கத்தின் வித்தாக விளங்கினர். மறைந்த தோழர்கள்  C D சௌத்திரி, கருணா பாபி சௌத்திரி, சய்யீத்மஹ்தூம், விஜயேந்திர காப்ரா,  B P  மித்ரா மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் தொழிலாளர்களைத் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
                நிஜாமின் அடக்குமுறை ஆட்சி கோலோச்சிய காலம்அதை எதிர்த்து இந்தப் பிராந்திய  தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதில் AITUC  யின் கிளையான ஹைத்ராபாத் பிரதேச தொழிலாளர் காங்கிரஸ் மறைந்த தோழர்  V D தேஷ்பாண்டே அவர்களின் சீரிய தலைமையில் சிறப்பாகப் பங்காற்றியது.
                இந்தப் பகுதியின் முன்னேற்றத்திற்காக மாணவர்களின் புகழ்வாய்ந்த போராட்டம் நடந்தது. அதன் பிறகுதான்  நவீன ஆலைகள் வருவதில் வேகம் மிகுந்தது. இன்று தொழிற்சாலைகள் மிகுந்த ஐந்து பகுதிகள் (ZONE) உள்ளதுடன், டெல்லிமும்பை இடைவழிச் சாலையில் உத்தேசிக்கப்பட்டுள்ள DMIC புராஜெக்டினால் இந்த நகர் உற்பத்திக் கேந்திரமான நகரின்  மையமாக மாறுவதில் வளர்ச்சிப் பாய்ச்சலில் வளர்கிறது.
                தற்போது  AITUC, CITU, HMS, BMS, INTUC  மற்றும் பல தொழிலாளர் சங்கங்கள் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதில் களப்பணியாற்றுகின்றனதொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 1989 முதல் உயிர்த் துடிப்போடு இயங்கி வருவதுடன் பல ஒன்று பட்ட போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளது.
                1990 வரை இந்நகரம் மரபான சமூக நல்லிணக்கத்தையும்  சகிப்புத் தன்மையும் போற்றிக் காத்தது. 1990 பின் நடந்த சிறிதும் பெரிதுமான சமூக மோதல்களும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கங்களும் தொழிலாளர் வர்க்கத்தைக் கடுமையாகப்  பாதித்தது.
                உங்களின் இந்த மாநாடு நடைபெறும் காலமானது திரு நரேந்திரமோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள காலம். திரு மோடியின் அரசு கண்மூடித்தனமாக மறுசீரமைப்புக் கொள்கைகளைக் கட்டவிழ்த்து விட்டு ஆக்ரோஷமாகத் திணிக்கத் துவங்கியுள்ள காலம்தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களையும் தொழிற்சாலை சட்டங்களையும் பல்வேறு மாநில அரசுகள் மூலமாகவும் தான் கொண்டுவர உத்தேசித்துள்ளத் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் மூலமாகவும் திணிக்க முற்பட்டுள்ள காலம்.
                அரசு செல்லும் திசைவழியானது நிச்சயம் தொழிலாளர்களுக்குப் பாதமானது: பெருமுதலாளிகள் கார்பரேட்களுக்குச் சாதகமானது என்பது தெளிவானதுஅரசு கீழ்க்கண்ட மாறுதல்களை ஏற்படுத்த விரும்புகிறது.
                ஒன்று, தொழிலாளர்களின் உழைப்பு மலிவானதாக்க வேண்டும் . இரண்டாவது, ஒப்பந்த அடிப்படையிலான உழைப்பை சட்டபூர்வமாக்க வேண்டும். மூன்றாவது, தொழிற்சங்கங்கள் அமைப்பதைக் கடினமாக்கிட வேண்டும்.
                சர்வதேச தொழிலாளர் அமைப்பான International Labour Organisation அரசின் இந்த நோக்கங்கள் குறித்து தனது அச்சத்தை வெளிப்படுத்தி கவலை தெரிவித்துள்ளது.. உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் கார்பரேட் பெருமுதலாளிகளுக்குச் சாதகமானது தொழிலாளர்களுக்கு எதிரானது என விவரித்துள்ளது.
                அரசின் இந்தக் கொள்கைகளை எதிர்த்து ஒருங்கிணைப்பு நடவடிக்கை குழுவின் தலைமையில் நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 2 ம் தேதி அன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தன. நாம் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி பெற கடுமையாக உழைத்தோம்பத்து கோடி தொழிலாளர்களுக்கும் மேல் ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஒன்றுபட்ட போராட்ட உணர்வை –- ஒன்றுபட்ட போராட்ட இயக்கங்களை -- மேலெடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்!
                எனது வரவேற்புரையை நிறைவு செய்வதற்கு முன்பு நமது எதிர்கால திட்டமிடல் மற்றும் யுக்திகளைப் பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் (1) திரட்டப்படாத தொழிலாளர்களைத் திரட்டுவது (2) தேசிய குறைந்தபட்ட கூலியை வலியுறுத்துவது  (3) அனைவருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வு ஊதியத்தைப் பாதுகாத்திட அரசைத் தொடர்ந்து நிர்பந்திப்பது (4) தொழிலாளர் உரிமைகளை மனித உரிமைகளைப் போல கருதச் செய்வது (5) கல்வி உரிமை, நலவாழ்வு (ஆரோக்கிய) உரிமை, ஓய்வூதிய உரிமை, வீட்டு வசதி உரிமை ஆகியவற்றின் பால் நமது கோரிக்கைகளை மையப்படுத்துவதுமேலும், வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட வேலை நேரத்தைக் குறைத்திட நாம் கோரிக்கை எழுப்ப வேண்டும்.
                மேலே குறிப்பிட்டவைகளைச் சாத்தியமாக்கிட நாம் மேலும் மேலும் ஒற்றுமைக்காகப் பாடுபட வேண்டும்துறை சார்ந்த தன் குழு சார்ந்த கோரிக்கைகளிலிருந்து விடுபட்டு பொது கோரிக்கைகளிலும் பொது வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் நமது கவனத்தைக் குவிக்க வேண்டும்..  பிளவு படுத்தும் ஜாதிய மதவாத சக்திகளின் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதில் நமக்குத் தெளிவு வேண்டும்இவற்றோடு கூட தொழில் நுட்ப மாறுதல்கள், தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொழிலாளர்கள் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களின் விளைவுகள் குறித்தும் நாம் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
                NFTE தொழிற் சங்கம் கடந்த காலத்தில் ஒப்பற்றத் தலைவர் தோழர் O P  குப்தா, M B விச்சாரே அவர்கள் தலைமையில் சாதித்த வரலாற்று சாதனைகளைப் பாராட்டுகிறேன்,  BSNL  வளர்ச்சிக்காகவும் அதன் சந்தாதாரர்களின் நலன்களுக்காகவும் நடைபெறும் உங்கள் பங்கைப் பாராட்டுகிறேன்.  BSNL  காப்போம்தேசம் காப்போம் !
Dr. B. K .  காங்கோ

வரவேற்புக்குழுத் தலைவர் மற்றும்  AITUC மூத்த தலைவர்

No comments:

Post a Comment