.

Sunday, August 30, 2015

பணிஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்


இன்று (31-08-2015) ஓய்வுபெறும் திரு D.சாலமன் தாமஸ் SDE VPT/WLL MTCE CUDDALORE எழுத்தராக 2-6-1981–ல் சேலம் துணைக்கோட்ட அலுவலகத்தில் பணியில் சேர்ந்து ஆறு மாதம் பணிபுரிந்தபின் அங்கிருந்து மாற்றலாகி 24-11-1981 கடலூர் கோட்ட அலுவலகத்தில் ESTABLISHMENT செக்சனில் பணியில் சேர்ந்தார். அப்பொழுது இரண்டுகட்ட ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தியது, 1980–களில் நடைபெற்ற பல்வேறு கேடர்களுக்கான பல இலாக்கா தேர்வுகளை திறம்பட நடத்தியது. ஊழியர் பிரிவு முற்றிலும் கணினி மயமாக்கபட்டபோது அதற்கான அவரது பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. அவரது பங்களிப்பு இலாக்கா பணியில் மட்டுமில்லாமலும், தேசிய தொழிற்சங்கத்தில் (FNPTO) மாவட்ட செயலராக இருந்து தொழிற்சங்க பணியிலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
பின்னர் 1996-ல் இலாக்கா போட்டித்தேர்வில் JTO–வாக தேர்ச்சி பெற்று பண்ருட்டியில் JTO OUTDOOR ஆக பணியில் சேர்ந்தார். பண்ருட்டி நகர பகுதியில் பல இடங்களில் பயன்பாட்டில் இல்லாமல் பூமிக்கடியில் வீணாக இருந்த பழைய கேபிள்களை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
  1-1-2000 அன்று மாற்றலில் வந்து கடலூர் JTO-MARR ஆக பணியில் சேர்ந்து கடலூர்,விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் புதிய MARR VPT-களை நிர்மாணிப்பதிலும், சரிவராமல் இயங்கிய பல VPT-களை கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய இடங்களில் மாற்றியமைத்து இயங்கவைத்ததும், பல கிராமங்களில் புதிய டவர்களை நிர்மாணித்தும் இப்பணிகளை தனி டீம் ஆக ஆக்கி சிறந்த லீடராகவும் செயல்பட்டார். VPT-களை STD PCO-களாக மாற்றி அதனை அதிக வருமானம் கிடைக்கசெய்து நஷ்டத்தில் இயங்கிவந்த VPT-களை லாபத்தில் இயங்கவைத்து தமிழ் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்திற்கு  அதிகப்படியான வருமானத்தை பெற்றுத்தந்தார். மாநில நிர்வாகம் மற்ற மாவட்டங்களுக்கு கடலூர் மாவட்டம் VPT-களை STD PCO-களாக மாற்றி அதன்மூலம் அதிக வருமானம் பெற்றதை மேற்கோள் காட்டி கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் இவருக்கு தெரியாத மலைகிராமங்களே இல்லை என சொல்லலாம். பல மலைக் கிராமங்களில் போக்குவரத்து வசதிகூட இல்லாத காலத்தில் நடந்து சென்றே தனது குழுவுடன் இரவு பகல் என்று பாராமல் பணி செய்து அக்கிராமங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் தொலைபேசி வசதி ஏற்படுத்தி கொடுத்து நமது மாவட்டத்திற்கு பெருமைசேர்த்தார். இதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் MAAR VPT-கள் WLL VPT-களாக மாற்ற பல ஊர்களில் புதிய WLL BTS-களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்மாணித்து கொடுத்ததிலும் இவரது பங்களிப்பு சிறப்பாகும். மேலும் பல தொலைபேசி நிலையங்களில் பழைய சோலார் பேனல்களை நிர்மாணித்து சூரியசக்தியினை பெற்று மின்செலவைக் குறைத்து, அதனால் நமது மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக் காட்டிள்ளார். சிதம்பரம் பகுதியில் உள்ள ஒருசிறிய தொலைபேசி நிலையத்தில் ஒரு மாதத்தில் ரூபாய் ஐந்தாயிரம் மின்சாரக்கட்டணம் குறைந்துள்ளதை கண்டு  மாதம்  சந்தேகப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சர்பிரைஸ் விசிட் செய்தும் உள்ளனர். கல்வராயன்மலையில் அமைந்துள்ள வெள்ளிமலை தொலைபேசி நிலையத்தில் முழுக்க முழுக்க சோலார் பேனல்களைக்கொண்டு பகல் முழுவதும் மின்சாரம் இல்லாமல் சூரியசக்தி மூலம் மட்டுமே இயங்கும் படியானவகையில் உபகரணங்களை நிறுவி மின்சார செலவை குறைத்தும் காட்டியுள்ளார். சில அதிகாரிகள் தங்களின் சுய வெறுப்பு காரணமாக நன்கு இயங்கிவந்த அந்த குழுவை கலைத்தது துரதிர்ஷ்டவசமாகும். இக்குழுவைக் கலைத்ததன் மூலம் குழுவின் உழைப்பு அனைத்தும் வீணாகியது
திரு.D.சாலமன்தாமஸ் தனது சக ஊழியர்களிடம் தான் ஒரு அதிகாரி என்று இல்லாமல் சக தோழர், நண்பர் என்ற உரிமையில் பழகுவதிலும், சங்க வேறுபாடு இன்றி அனைத்து சங்கத்தினரிடம் இனிமையாக பழகுவதிலும் அவருக்கு நிகர் அவரே. திரு. திரு.D.சாலமன்தாமஸ் அவர்களின் துணைவியார் கடலூர் GM அலுவலகத்தில் பணிபுரியும் தோழியர்.கோதைசாலமன் நமது சங்கத்தின் உறுப்பினர் ஆவார். திரு.D.சாலமன்தாமஸ் அவர்களின் பிறந்த நாள் ஆன இன்று அவரது பணி ஓய்வு நாள் வருவதும் சிறப்பாகும். அவரது பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
வாழ்த்து தெரிவிக்க தொடர்பு எண்: 9486101393

1 comment: