.

Friday, November 7, 2014

அக்டோபர் புரட்சி

இன்று (நவம்பர் 7)



1917 - அக்டோபர் புரட்சி
 விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரஷ்ய இடைக்கால அரசாங்கத்தை வீழ்த்திய தினம் .
 (பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).

போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். முதல் புரட்சி, 1917 பெப்ரவரியில் அரசரின் அதிகாரிகளுடைய திறமை குறைவாலும், கொடுங்கோன்மையினாலும் குடிமக்கள் பொறுமையிழந்து இப்புரட்சி நிகழ்ந்தது. நவம்பர் 7, 1917 (பழைய ஜூலியன் நாட்காட்டியின்படி 1917 அக்டோபர் 25) இல் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது. இது கார்ல் மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சியாகும்.

No comments:

Post a Comment