.

Thursday, July 17, 2014

Works Committee (பணிக்குழு) கூட்டம் 15-07-2014

மது கடலூர் மாவட்ட Works Committee (பணிக்குழு) கூட்டம் 15-07-2014 அன்று காலை நமது Sr GM திரு P சந்தோஷம் ITS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக காலை 9:30 மணியளவில் நடைபெற்ற Pre Works Committee கூட்டத்திலும் நமது சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்களுக்கு இணைந்து நடைபெற்ற பணிக்குழு கூட்டத்தில் நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் கேரளா மாநிலத்தை போல வருவாயை பெருக்க நாமும் சிறந்த சேவையை முன்னிறுத்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நமது சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட  works committee items அனைத்திற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க நமது Sr GM உத்திரவிட்டுள்ளார். 

அதன்படி 
1.சிதம்பரத்தில் இரண்டு 3G  BTSகள்  16-07-2014 அன்று commission செய்யப்பட்டுள்ளன. 
2.கடலூர் CAF section க்கு இரண்டு TTA -க்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். 3.கடலூர், நெய்வேலி, விழுப்புரம் CSC களுக்கு முதல் கட்டமாக 2GB RAM கொண்ட கணினிகளாக  விரைவில் Upgrade செய்யப்படவுள்ளன. 
4.சிதம்பரம் அண்ணாமலைநகர் மற்றும் TEMPLE தொலைபேசி நிலையங்களுக்கு  புதிய பவர் பிளான்ட் மிக விரைவில் பொருத்தப்பட உள்ளது.
5.சேத்தியா தோப்பு  தொலைபேசி நிலையம் ஒரு மாதத்திற்குள் இலக்கா கட்டிடத்திற்கு மாற்றப்படும். 
6.நெய்வேலி ஆர்ச் கேட்  பகுதியில் புதிய இணைப்புகள் வழங்க ஒரு மாதத்திற்குள் ஏற்பாடு செய்யப்படும்.
7. Hungama தொடர்பான புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பில்லில் adjust செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது 
8.Mobile Signal பிரச்சினை தொடர்பாக உரிய  அதிகாரியிடம் Optimization செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் இது சம்பந்தமாக பிரச்சினைகள் இருப்பின் நமது works committee உறுப்பினர்களிடம் தெரிவிக்க கேட்டுகொள்கிறோம் 
9.அனைத்து கணினிகளும் Windows 7 OS படிப்படியாக மாற்றப்படும்.முதற்கட்டமாக GM அலுவலகத்திலுள்ள கணினிகள் மாற்றப்படும்.
10.அனைத்து ஊழியர்களுக்கும் Service SIM அந்தந்த CSC களில் புகைப்படம்,விண்ணப்பம் மற்றும் ரூ 20/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
11.A /C புழுதடைந்துள்ள அண்ணாமலைநகர்,காடாம்புலியூர் ,பரங்கிப்பேட்டை,வீரபெருமாள் நல்லூர் போன்ற ஊர்களில் உடனடியாக சரி செய்யப்படும்.
12.CDR தொடர்பான பிரச்சினை DGM (IN ) அவர்களுடன் விவாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும்.
13.உளுந்தூர் பேட்டை தொலைபேசி நிலைய SEPTIC TANK பிரச்சினை உடனே சரிசெய்யப்படும். 
14.தொலைபேசி கருவி பழுதை சரி செய்வதில் உள்ள பிரச்சினை சரி செய்யப்படும்


உடனடி நடவடிக்கை எடுத்த நமது Sr GM அவர்களுக்கு நமது நன்றிகள்.



தகவல் பலகைக்கு இங்கே 

No comments:

Post a Comment