Friday, November 27, 2015

மாவட்ட அலுவலகக் கிளையில்
               பணி நிறைவு பாராட்டு விழா

NFTE  மாவட்ட அலுவலகக் கிளை சார்பில் ஓய்வு பெறஉள்ள தோழர் N.விஜயகுமார் தோழியர் R G ராணி இருவருக்கும் பாராட்டு விழா கடலூர் மாவட்ட சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றதுகிளைத்தலைவர் தோழர்  D துரை அவர்கள் தலைமை தாங்கினார். கிளைச் செயலர் தோழர் S இராஜேந்திரன் வரவேற்றார்
மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் கீதா, மாவட்டப் பொருளாளர் தோழர் சாதிக் பாஷா, மாவட்ட உதவிச் செயலர் தோழர் குழந்தைநாதன் முதலானோர் வாழ்த்தினர்.  SNEA சார்பில் துணைப்பொது மேலாளரான தோழர் பால்கி இருவரின் பணிநேர்த்தியையும் அவர்கள் தத்தமது வாழ்க்கையை சீராக அமைத்துக்கொண்ட திறத்தை எடுத்துக்கூறி சிறப்பான வாழ்த்துரை நல்கினார்.
 மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் தமது வாழ்த்துரையில் தோழர்களைப் போன்றவர்கள் சங்கத்தின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத விஸ்வாசம் தான் சல்லி வேர்களாய் NFTE சம்மேளனத்தை பிரம்மாண்டமாய் காத்து வருகிறதுதோழர் குப்தாவின் நீண்டகால கண்னோட்டம் தான் அரசுத் துறையிலிருந்து பொதுத் துறையாய் மாறினவற்றுள்ளெல்லாம் நாம் மட்டுமே அரசுப் பென்ஷன் பெற்று வருவதைச் சாத்தியமாக்கியுள்ளதுஇதனைப் புரிந்து கொள்ளாத ஊழியர்கள், பிரச்சாரத்திற்கு மயங்கி நமது சம்மேளனம் அங்கீகாரம் பெறத் தவறிய காலத்தில் நமது துறை வீழ்ச்சியைச் சந்தித்தது.  NFTE க்கு அங்கீகாரம் கிடைத்தபிறகு தான் தேங்கிக் கிடந்த பிரச்சனைகள் தீர்வடையத் தொடங்கின. உதாரணமாக 78,2 பெற்றதைச் சொல்லலாம்.
7 வது சம்பளக் கமிஷன் அறிக்கைதரப்பட்டுவிட்டது. நமக்கு அது கிடைக்குமா? நமக்கு சம்பளக்குழு அமைக்கப்படுமா என்பது நம் அனைவர் முன் உள்ள கேள்விஇதற்கு விடை அங்கீகாரத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவதைப் பொருத்தது என நமக்கு முன் உள்ள கடமைகளை நினைவுபடுத்தி தோழர்களை வாழ்த்தி அமர்ந்தார்..
அடுத்து தோழர்களுக்கு கிளையின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.
 மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் K.சேது அவர்கள் சிறப்புரையாற்றி தோழர்களைப் பாராட்டினார்நாடு கூறுபோடப்பட்டு விடுதலை அடைந்ததற்கு முதல் நாள் சிதறிக்கிடந்த தபால் தந்தி தொழிலாளர் சங்கங்கள் ஒன்று பட்டு UPTW  என்ற அமைப்பும் அதனைத் தொடர்ந்து தோழர் குப்தா மற்றும் மறைந்த தலைவர் பாபு ஜெகஜீவன் ராம் முயற்சியால் NFPTE என்ற ஒன்றுபட்ட சம்மேளனம் உருவான வரலாற்றை கூறினார்பண்டித நேரு மக்களால் கடவுளாகக் கொண்டாடப்பட்ட நேரத்தில் உலகே வியக்கும் வண்ணம் தபால் தந்தி அமைப்பின் சார்பில் தோழர் குப்தா வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்த நெஞ்சுரத்தை நினைவுபடுத்தினார். அந்த இயக்கத்தின் மணியான தோழர்களுக்கு நீங்கள் பொருத்தமான பாராட்டு விழா நடத்துகிறீர்கள்நான் இந்த கூட்டத்திற்கு வருவதாகச் சொன்னபோது 95 வயது இளைஞரான தோழர் D ஞானையா அவர்கள் தோழர்களை ஓய்வுக் காலத்தை நினைத்தவாறு மகிழ்ச்சியுடன் வாழச் சொல்லுங்கள் என்ற ஞானத் தந்தையின் வாழ்த்துக்களோடு மாநில சங்கத்தின் வாழ்த்துதல்களையும் தெரிவித்து நிறைவு செய்தார்.
விழாவின் சிறப்பு செயல் நாயகனான தோழர் விஜயகுமார் பணியாற்றிய காலத்தில் சங்கம் எப்படி தனக்கு உறுதுணையாக இருந்தது என்பதை ரத்தினச் சுருக்கமாக தமது ஏற்புரையில் பேசியதுதான்தோழியர் ராணி தாம் எப்படி பணிக்கு வந்தார், பணியாற்றிய காலத்தில் தமது அலுவல மற்றும் குடும்ப வாழ்விலும் தோழர்கள் மற்றும் தோழியர்கள் துணைநின்றதை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டினார்.
இறுதியாக தோழர்  P. ஜெயராஜ் நன்றி கூறினார்எளிய சுவையான உணவிற்கு தோழர் S.குருபிரசாத் ஏற்பாடு செய்திருந்தார்தோழர் தோழியர்கள் திரளாகப் பங்கேற்ற நினைவில் நிற்கும் நிறைவான விழாவாக பாராட்டு விழா அமைந்திருந்தது,